அமெரிக்க கருவூலத் துறையானது, தனது முக்கிய வர்த்தகப் பங்காளிகளை கண்காணிக்கும் பட்டியலில் இந்தியாவை சேர்த்துள்ளது.
இந்த சேர்ப்பு அவர்களது நாணய பழக்க வழக்கங்களையும் பெரும் பொருளியல் கோட்பாடுகளையும் கண்காணித்திட உதவும்.
இந்த பட்டியலானது அமெரிக்காவின் முக்கிய வர்த்தகப் பங்களிப்பு நாடுகளின் கொள்கைகள் மீதான அரையாண்டு அறிக்கையின் ஒரு பகுதியாகும்.
அமெரிக்கக் கருவூலத் துறையானது தமது வர்த்தக நலன்களுக்காக எந்தெந்த நாடுகள் செயற்கையாக தங்களது நாணயத்தின் மதிப்பை மாற்றுகின்றன என்பதைக் கண்டுபிடித்து காங்கிரசுக்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
இது ஏமாற்று நாணய கையாளுகையை கண்டுபிடித்திட மூன்று அளவுகளைக் கொண்டுள்ளது. அவையாவன
இருபது பில்லியன் டாலர் அளவிற்கு அமெரிக்காவுடனான இருதரப்பு வர்த்தகம்
அந்நாட்டின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை அந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவிகிதம்.
ஒரு வருடத்தில் அந்நிய நாணயங்களின் நிகர கொள்முதல் அந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவிகிதம்.
இந்தியா, இந்தப் பட்டியலில் சீனா, ஜப்பான், தென் கொரியா, ஜெர்மனி மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளுக்குப் பிறகு சேர்க்கப்பட்ட ஆறாவது நாடாகும்.