TNPSC Thervupettagam

பெரும்பாலை அகழாய்வு – தமிழ்நாடு

June 26 , 2024 5 days 218 0
  • தருமபுரி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலையில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் துறை அகழாய்வுகளின் போது கண்டுபிடிக்கப்பட்ட பானை ஓடுகளில் "வடிவியல் குறியீடுகளை ஒத்திருக்கும்" சுவர் ஓவிய அடையாளங்களும் அடங்கும்.
  • இந்தத் தளத்தின்  அடிமட்டத்தில் கண்டறியப்பட்ட இந்த பொருட்களானது கி.மு. 6 ஆம் நூற்றாண்டுக்கு முந்தையதாகும்.
  • மட்பாண்டங்களின் வடிவங்கள் மற்றும் அளவு ஆகியவற்றின் அடிப்படையில் இது இரும்புக் காலத்தைச் சேர்ந்தது என மதிப்பிடப்பட்டுள்ளது.
  • காவிரி ஆற்றின் கிளை நதிகளில் ஒன்றான நாகாவதி (பண்டைய கால பாலாறு) ஆற்றின் கரையில் பெரும்பாலை அமைந்துள்ளது.
  • விஜயமங்கலத்தைச் சேர்ந்த கார்மேககவிராயர் எழுதிய 13 ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்த இலக்கியப் படைப்பான கொங்குமண்டல சதகம், கொங்கு மண்டலத்தின் வடக்கு எல்லையாக பெரும்பாலையைக் குறிப்பிடுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்