தருமபுரி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலையில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் துறை அகழாய்வுகளின் போது கண்டுபிடிக்கப்பட்ட பானை ஓடுகளில் "வடிவியல் குறியீடுகளை ஒத்திருக்கும்" சுவர் ஓவிய அடையாளங்களும் அடங்கும்.
இந்தத் தளத்தின் அடிமட்டத்தில் கண்டறியப்பட்ட இந்த பொருட்களானது கி.மு. 6 ஆம் நூற்றாண்டுக்கு முந்தையதாகும்.
மட்பாண்டங்களின் வடிவங்கள் மற்றும் அளவு ஆகியவற்றின் அடிப்படையில் இது இரும்புக் காலத்தைச் சேர்ந்தது என மதிப்பிடப்பட்டுள்ளது.
காவிரி ஆற்றின் கிளை நதிகளில் ஒன்றான நாகாவதி (பண்டைய கால பாலாறு) ஆற்றின் கரையில் பெரும்பாலை அமைந்துள்ளது.
விஜயமங்கலத்தைச் சேர்ந்த கார்மேககவிராயர் எழுதிய 13 ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்த இலக்கியப் படைப்பான கொங்குமண்டல சதகம், கொங்கு மண்டலத்தின் வடக்கு எல்லையாக பெரும்பாலையைக் குறிப்பிடுகிறது.