TNPSC Thervupettagam

பெர்சவெரென்ஸ் உலாவிக் கலத்தின் புதிய வேகப் பதிவு

November 24 , 2023 239 days 170 0
  • நாசாவின் பெர்சீவெரென்ஸ் உலாவிக் கலம் தனது திறன்மிகு வழிகாட்டல் அமைப்பை  பயன்படுத்தி செவ்வாய்க் கோளின் கடினமான பகுதியைப் பாதுகாப்பாகக் கடந்து சென்று ஒரு புதிய சாதனையைப் படைத்துள்ளது.
  • பெர்சீவெரென்ஸ் உலாவிக் கலமானது, கிழக்குப் பகுதியில் உள்ள “பனிச்சரிவு சிகரம்” எனப்படும் கற்பாறைகள் நிறைந்த பகுதிக்குள் நுழைந்தது.
  • தானியங்கிப் பயண அமைப்பானது 1,140.7 அடி (347.7 மீட்டர்) தூரம் என்ற ஒற்றை-நாள் இயக்கத் தொலைவு சாதனையைப் பதிவு செய்துள்ளது.
  • மேலும், செவ்வாய்க் கோளில் மனித உதவியின்றி 2,296.2 அடி (699.9 மீட்டர்) தொலைவு வரை பயணித்ததன் மூலம் மிக நீண்ட தூர வழிசெலுத்தல் மேற்கொண்டதற்கான ஒரு சாதனையையும் இது பதிவு செய்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்