நாசாவின் பெர்சீவெரென்ஸ் உலாவிக் கலம் தனது திறன்மிகு வழிகாட்டல் அமைப்பை பயன்படுத்தி செவ்வாய்க் கோளின் கடினமான பகுதியைப் பாதுகாப்பாகக் கடந்து சென்று ஒரு புதிய சாதனையைப் படைத்துள்ளது.
பெர்சீவெரென்ஸ் உலாவிக் கலமானது, கிழக்குப் பகுதியில் உள்ள “பனிச்சரிவு சிகரம்” எனப்படும் கற்பாறைகள் நிறைந்த பகுதிக்குள் நுழைந்தது.
தானியங்கிப் பயண அமைப்பானது 1,140.7 அடி (347.7 மீட்டர்) தூரம் என்ற ஒற்றை-நாள் இயக்கத் தொலைவு சாதனையைப் பதிவு செய்துள்ளது.
மேலும், செவ்வாய்க் கோளில் மனித உதவியின்றி 2,296.2 அடி (699.9 மீட்டர்) தொலைவு வரை பயணித்ததன் மூலம் மிக நீண்ட தூர வழிசெலுத்தல் மேற்கொண்டதற்கான ஒரு சாதனையையும் இது பதிவு செய்துள்ளது.