பெர்சீட் எனும் டஜன் கணக்கான "எரி நட்சத்திரங்களை" பொழியும் ஆண்டின் மிகப் பெரிய அளவிலான விண்கல் பொழிவுகளில் ஒன்றாகும்.
பெர்சீட் விண்கல் பொழிவானது ஜூலை 17 முதல் ஆகஸ்ட் 24 ஆம் தேதி வரை நிகழும் என்ற நிலையில் ஆகஸ்ட் 13 ஆம் தேதி விடியலுக்கு முன்பாக ஆகஸ்ட் 12 ஆம் தேதி அன்று இரவு இந்த நிகழ்வு உச்ச நிலையில் இருந்தது.
உகந்த சூழ்நிலையில், ஒரு மணி நேரத்திற்கு 50 முதல் 100 விண்கற்கள் வரை காண இயலும்.
எரி நட்சத்திரங்கள் என்று அழைக்கப் படுபவை உண்மையில் நட்சத்திரங்கள் அல்ல, ஆனால் அவை பூமியின் வளிமண்டலத்தில் 130,000 mph (210,000 km/h) வேகத்தில் பாய்ந்து செல்லும் சிறிய பாறைகள் ஆகும்.
1993 ஆம் ஆண்டில் ஏற்பட்ட பெர்சீட் நிகழ்வின் போது அழிக்கப் பட்ட ஒரே செயற்கைக் கோள் ஒலிம்பஸ் தகவல் தொடர்பு செயற்கைக் கோள் மட்டுமே ஆகும்.