எலியுட் கிப்சோஜ் பெர்லின் மாரத்தான் போட்டியில் 2:01:09 என்ற நேரத்தில் கடந்து தனது சொந்த உலகச் சாதனையை முறியடித்தார்.
ஜெர்மனியின் தலைநகரில் நடைபெற்ற இந்தப் பந்தயத்தில் கென்யாவின் ஓட்டப் பந்தய வீரர், ஆண்களுக்கான போட்டியில் உலகச் சாதனையைப் படைத்தது இது இரண்டாவது முறையாகும்.
42.2 கிமீ பந்தயத்தில் கிப்சோஜின் முந்தைய சிறந்தச் சாதனைப் பதிவானது 2018 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட 2:01:39 என்ற சாதனையாகும்.
எத்தியோப்பியாவின் டிஜிஸ்ட் அசெபா, 2:15:37 என்ற சாதனையில் பெண்களுக்கான போட்டியில் வெற்றி பெற்றுள்ளார்.