TNPSC Thervupettagam

பெலம் பிரகடனம்

August 15 , 2023 340 days 197 0
  • அமேசான் ஒத்துழைப்பு ஒப்பந்த அமைப்பின் உச்சி மாநாட்டின் (ACTO) போது அமேசான் மழைக் காடுகளின் வளங்காப்பிற்கு முன்னுரிமை அளிப்பதற்கான முயற்சியில் தென் அமெரிக்கத் தேசியத் தலைவர்களின் சந்திப்பு நடைபெற்றது.
  • இது கடந்த 14 ஆண்டுகளில் இந்த 45 ஆண்டுகால அமைப்பின் (1978) முதல் கூட்டத்தைக் குறிக்கிறது.
  • இது பிரேசிலின் பெலம் நகரில் நடைபெற்றது.
  • இது பிரேசில் அதிபர் முன்வைத்த, அமேசானின் வளங்காப்பிற்கான உலக நாடுகளின் அக்கறையைப் பயன்படுத்துவதற்கான ஒரு உத்தியை வலுப்படுத்துகிறது.
  • ACTO ஆனது அமேசான் நதிப்படுகையில் ஒரு நிலையான மற்றும் நீடித்த வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு உலகளாவிய நிறுவனமாகச் செயல் படுகிறது.
  • பொலிவியா, பிரேசில், கொலம்பியா, ஈக்வெடார், கயானா, பெரு, சுரினாம் மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகள் இந்த அமைப்பில் இடம் பெற்றுள்ளன.
  • அமேசான் நதியானது இந்தியாவை விட இரண்டு மடங்கு பெரிய பரப்பளவில் நீண்டு பாய்கிறது.
  • அதில் மூன்றில் இரண்டு பங்கு பிரேசில் நாட்டிலும், மேலும் மீதமுள்ள மூன்றில் ஒரு பங்கு இதர ஏழு நாடுகள் மற்றும் ஒரு பிரதேசத்திலும் பாய்கிறது.
  • அதன் மாபெரும் பரப்பளவு, இதுவரையில் பூமியின் பல்லுயிர்ப் பெருக்கத்தில் சுமார் 10 சதவீதத்தைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்