அமேசான் ஒத்துழைப்பு ஒப்பந்த அமைப்பின் உச்சி மாநாட்டின் (ACTO) போது அமேசான் மழைக் காடுகளின் வளங்காப்பிற்கு முன்னுரிமை அளிப்பதற்கான முயற்சியில் தென் அமெரிக்கத் தேசியத் தலைவர்களின் சந்திப்பு நடைபெற்றது.
இது கடந்த 14 ஆண்டுகளில் இந்த 45 ஆண்டுகால அமைப்பின் (1978) முதல் கூட்டத்தைக் குறிக்கிறது.
இது பிரேசிலின் பெலம் நகரில் நடைபெற்றது.
இது பிரேசில் அதிபர் முன்வைத்த, அமேசானின் வளங்காப்பிற்கான உலக நாடுகளின் அக்கறையைப் பயன்படுத்துவதற்கான ஒரு உத்தியை வலுப்படுத்துகிறது.
ACTO ஆனது அமேசான் நதிப்படுகையில் ஒரு நிலையான மற்றும் நீடித்த வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு உலகளாவிய நிறுவனமாகச் செயல் படுகிறது.
பொலிவியா, பிரேசில், கொலம்பியா, ஈக்வெடார், கயானா, பெரு, சுரினாம் மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகள் இந்த அமைப்பில் இடம் பெற்றுள்ளன.
அமேசான் நதியானது இந்தியாவை விட இரண்டு மடங்கு பெரிய பரப்பளவில் நீண்டு பாய்கிறது.
அதில் மூன்றில் இரண்டு பங்கு பிரேசில் நாட்டிலும், மேலும் மீதமுள்ள மூன்றில் ஒரு பங்கு இதர ஏழு நாடுகள் மற்றும் ஒரு பிரதேசத்திலும் பாய்கிறது.
அதன் மாபெரும் பரப்பளவு, இதுவரையில் பூமியின் பல்லுயிர்ப் பெருக்கத்தில் சுமார் 10 சதவீதத்தைக் கொண்டுள்ளது.