காங்கிரஸ் தலைவர்கள் 1924 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க காங்கிரஸ் மாநாட்டிற்கு மகாத்மா காந்தி அவர்கள் தலைமை தாங்கிய நிகழ்வின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுகின்றனர்.
1924 ஆம் ஆடனில் பெல்காம் நகரில் நடைபெற்ற அமர்வு ஆனது, இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் ஒரு தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளது.
காங்கிரஸ் தலைவராக ஓர் அமர்விற்கு மகாத்மா காந்தி அவர்கள் தலைமை வகித்த ஒரே அமர்வு அதுவேயாகும்.
காந்தி ஒத்துழையாமை இயக்கத்தை இடைநிறுத்த வழி வகுத்த 1922 ஆம் ஆண்டு சௌரி சௌரா சம்பவத்தைத் தொடர்ந்து இந்த அமர்வு நடைபெற்றது.
இது மோதிலால் நேரு மற்றும் C.R.தாஸ் தலைமையிலான சுராஜ்ஜிய தரப்பினருக்கும், காந்தியின் அகிம்சையான எதிர்ப்பு என்ற கொள்கையினை ஆதரித்த மாற்றத்தை விரும்பாத தரப்பினருக்கும் இடையே கட்சியில் பிளவை ஏற்படுத்தியது.
இந்த அமர்வின் போது, காந்தி அவர்கள் அகிம்சை, மத நல்லிணக்கம் மற்றும் "சுய ராஜ்ஜியம்" பற்றிய தனது கருத்துக்களை முன்வைத்தார்.