செர்பியா நாட்டில் நடைபெற்ற 56-வது பெல்கிரேட் சர்வதேச குத்துச்சண்டைப் போட்டியில் (56th Belgrade International Boxing Tournament) இந்தியாவின் குத்துச்சண்டை வீரர்களான சுமித் சங்வான் 91 கிலோ கிராம் எடைப் பிரிவில் தங்கப் பதக்கத்தினையும், நிக்ஹத் ஜரின் 51 கிலோ கிராம் எடைப் பிரிவில் தங்கப் பதக்கத்தினையும் வென்றுள்ளனர்.
மேலும் இப்போட்டியில் ஹிமான்சு சர்மா இந்தியாவிற்கு மூன்றாவது தங்கப் பதக்கத்தினை பெற்றுத் தந்துள்ளார்.
செர்பியாவில் நடைபெற்ற இப்போட்டியில் 5 வெண்கலம், 5 வெள்ளி, 3 தங்கம் என மொத்தம் 13 பதக்கங்களைப் பெற்று இந்தியா இப்போட்டியை நிறைவு செய்துள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த பெண் குத்துச்சண்டை வீராங்கனைகளான ஜமுனா போரோ 54 கிலோ எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கத்தினையும், ரால்டே லால்பாக்மவாய் 81 கிலோ எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கத்தினையும் வென்றுள்ளனர்.
இந்தியாவைச் சேர்ந்த ஆண்கள் குத்துச்சண்டை வீரர்களான லால்டின்மாவியா 52 கிலோ எடைப் பிரிவிலும், வரிந்தர் சிங் 56 கிலோ கிராம் எடைப் பிரிவிலும், பவன் குமார் 69 கிலோ எடைப் பிரிவிலும் வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளனர்.
மேலும் ஆண்கள் பிரிவில் இந்தியாவின் நரேந்தர் 91 கிலோ எடைப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
மேலும், பெண்களுக்கான போட்டியில், இந்தியாவின் ராஜேஸ் நர்வால் 48 கிலோ கிராம் எடைப் பிரிவிலும், பிரியங்கா தாகூர் 60 கிலோ கிராம் எடைப் பிரிவிலும், ருமி கோகோய் 75 கிலோகிராம் எடைப் பிரிவிலும், நிர்மலா ராவத் 81 கிலோ கிராம் எடைப் பிரிவிலும் வெண்கலப் பதக்கத்தினை வென்றுள்ளனர்.