சிறந்த நீச்சல் வீரரான மைக்கேல் பெல்ப்ஸ் வைத்திருந்த 10 ஆண்டு கால உலகச் சாதனையை ஹங்கேரியாவைச் சேர்ந்த இளம் நீச்சல் வீரரான கிறிஸ்டோப் மிலக் என்பவர் முறியடித்தார்.
தென் கொரியாவில் நடைபெற்ற உலக நீச்சல் சாம்பியன்ஷிப்பில் இவர் 200 மீட்டர் பட்டர்பிளை இறுதிச் சுற்றில் 1:50.73 வினாடியில் (1 நிமிடம் 50.73 வினாடிகள்) வெற்றி பெற்றுள்ளார்.
இதன்படி இதற்கு முந்தைய பெல்ப்ஸின் உலக சாதனையை விட 0.78 வினாடியில் இவர் முன்னிலையில் உள்ளார்.