TNPSC Thervupettagam

பேக்யார்டு பறவைகள் கணக்கெடுப்பில் 1,036 இனங்கள் பதிவு

March 10 , 2024 131 days 256 0
  • நாடு முழுவதிலுமிருந்து கணக்கெடுப்பில் பங்கு பெற்ற பறவை ஆர்வலர்கள் 2024 ஆம் ஆண்டு பேக்யார்டு பறவைகள் கணக்கெடுப்பில் சுமார் 1036 பறவை இனங்களை ஆவணப் படுத்தியுள்ளனர்.
  • பறவைகளின் மீதான பன்முகத் தன்மையை ஆவணப்படுத்துவதற்கான உலகளாவிய குடிமக்கள் அறிவியல் முன்னெடுப்பில் இந்தியா 1,000க்கும் மேற்பட்ட கணக்கெடுப்பு பட்டியலைச் சமர்ப்பித்துள்ளது.
  • இது உலகிலேயே இரண்டாவது அதிக எண்ணிக்கையிலான  சமர்ப்பித்தல் ஆகும்.
  • இந்தியா இரண்டாவது அதிக எண்ணிக்கையிலான சரிபார்ப்புப் பட்டியலினை சமர்ப்பித்துள்ளது என்பதோடு இது இந்தக் கணக்கெடுப்பில் பங்கேற்ற அனைத்து நாடுகளிலும் மூன்றாவது அதிகமான இனங்கள் கொண்ட பட்டியல் ஆகும்.
  • அமெரிக்கா 172,025 இனங்களுடன் கூடிய சரிபார்ப்புப் பட்டியலைச் சமர்ப்பித்தது.
  • அதைத் தொடர்ந்து இந்தியா இரண்டாவது இடத்திலும், 25,420 இனங்களுடன் கனடா மூன்றாவது இடத்திலும் உள்ளன.
  • கொலம்பியா (1,363) மற்றும் ஈக்வடார் (1,130) அதிக இனங்களை சமர்ப்பித்துள்ளன.
  • கேரளாவில் அதிக எண்ணிக்கையிலான இனங்களைப் பதிவு செய்துள்ளது (14,023) என்ற நிலையில் அதைத் தொடர்ந்து தமிழ்நாடு (13,661) மற்றும் மகாராஷ்டிரா (5,725) ஆகியவை உள்ளன.
  • பேக்யார்டு பறவைகள் கணக்கெடுப்பானது ஒவ்வோர் ஆண்டும், வழக்கமாக பிப்ரவரி மாதத்தில் நான்கு நாட்களுக்கு நடைபெறும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்