அகில இந்திய நிதி நிறுவனங்களுக்கு (AIFIs) பேசல் III மூலதனக் கட்டமைப்பின் விதிமுறைகளை இந்திய ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.
இது நிதி திரட்டுதல், கடன் வழங்கீட்டு வழிகாட்டுதல்கள் மற்றும் முதலீட்டு இலாகாக்களின் வகைப்பாடு மற்றும் மதிப்பீடு குறித்த பல்வேறு விதிமுறைகளை உள்ளடக்கியது.
இது 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வரும்.
பேசல்-III தரநிலைகள் நிதி நிறுவனங்கள் இழப்பைத் தாங்கும் திறனை உறுதி செய்வதற்காக மூலதனத்தின் தரம் மற்றும் அளவை உயர்த்த முயல்கின்றன.