பஹ்ரைச்சில் மனிதர்களை உண்ணும் ஓநாய்/ஓநாய்களை கண்ணில் பட்டதும் சுட உத்தரப் பிரதேச அரசு அனுமதி அளித்துள்ளது.
மாநில அரசும் அந்தப் பகுதியினை 'வனவிலங்கு தாக்குதல் சார்ந்த பேரிடர்' பாதித்த பகுதியாக அறிவித்துள்ளது.
இந்தப் பிரச்சினையை விரிவான முறையில் கையாள அரசாங்கம் ஆனது 'பேடியா நடவடிக்கையினைத்' தொடங்கியுள்ளது.
இந்த நடவடிக்கையின் கீழ், வனத்துறையானது ஓநாய்களைப் பிடிப்பதற்கு ஆளில்லா விமானத்தில் பொருத்தப்பட்ட ஒளிப்படக் கருவிகள் மற்றும் வெப்பநிலையினைக் கொண்டு இடம் காணும் வசதி கொண்ட துல்லிய ஆளில்லா விமான நுட்பங்கள் ஆகியவற்றினைப் பயன்படுத்துகின்றது.
தலைமை வனவிலங்குக் காப்பாளர், முதலாவது அட்டவணையில் இடம் பெற்றுள்ள காட்டு விலங்குகள் மனிதர்களுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தினால், அதற்கானக் காரணங்களை விளக்கி எழுத்துப் பூர்வ உத்தரவை பிறப்பித்து அவற்றை வேட்டையாட அனுமதிக்கலாம்.