TNPSC Thervupettagam

பேட்டி பச்சாவோ பேட்டி படாவோ விரிவாக்கம்

November 25 , 2017 2584 days 5732 0
  • பிரதமர் தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு ”பேட்டி பச்சாவோ, பேட்டி படாவோ” திட்டத்தை” அனைத்திந்திய அளவில்,  அதாவது 2011-ஆம் ஆண்டின்  மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, நாடு முழுவதும் உள்ள 640 மாவட்டங்களிலும் விரிவுபடுத்த ஒப்புதல் வழங்கியுள்ளது.
  • இத்திட்டம்  நாட்டின் 161 மாவட்டங்களில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டதை அடுத்து, தற்போது அனைத்திந்திய அளவில் செயல்படுத்துவதற்காக விரிவுபடுத்தப்பட உள்ளது.
பேட்டி பச்சாவோ பேட்டி படாவோ
  • இத்திட்டமானது 2015-ஆம் ஆண்டு துவங்கப்பட்டது.
  • பாலின வேறுபாடு மிகுந்துள்ள மாவட்டங்களில் குறைந்து வரும் குழந்தைகள் பாலின விகிதத்தை (Child sex ratio) தடுப்பதற்காகவும், பெண்கள் மேம்பாட்டோடு தொடர்புடைய பிரச்சனைகளை களைவதற்காகவும் இத்திட்டம் தொடங்கப்பட்டது.
  • தற்போது நடப்பில் இத்திட்டமானது மூன்று அமைச்சகங்களின் கூட்டு முயற்சியால் செயல்படுத்தப்படுகின்றது.
    • மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம்
    • மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம்
    • மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
  • இத்திட்டம் தற்போது மோசமான குழந்தைகள் பாலின விகிதமுடைய (CSR) 161 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
  • இத்திட்டத்தின் பிற நோக்கங்கள்
    • பாலினம் சார்புடைய குழந்தை பாலினத் தேர்வு நீக்கலை தடுத்தல் (Prevent Gender based Sex-selective elimination).
    • பெண் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் அவர்கள் உயிர் வாழ்தலை உறுதி செய்தல்
    • பெண் குழந்தைகளின் கல்வியை உறுதி செய்தல்.
  • இத்திட்டமானது 1994- ன் முன்-கருத்தரித்தல் மற்றும் முன்கூட்டியேயான குழந்தைகள் பாலின கண்டறிதல் தொழிற்நுட்ப சட்டத்தின் (Pre-Conception & Pre-Natal Diagnostic Technique Act 1994) சரியான செயல்படுத்தலை உறுதி செய்ய உதவும்.
  • குழந்தைகள் பாலின விகிதம் (CSR) என்பது 0 முதல் 6 வயது வரையிலானவர்களில் 1000 ஆண் குழந்தைகளுக்கு எத்தனை பெண் குழந்தைகள் உள்ளனர் என்ற எண்ணிக்கையாகும்.
  • 1961ல் 976 ஆக இருந்த CSR ஆனது, 2011 கணக்கெடுப்பின் படி 918 ஆக குறைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்