சில்லு வடிவமைப்புத் துறையில் புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்கு உதவுவதற்காக பிரத்யேகமான பேப்லெஸ் சில்லு வடிவமைப்பு காப்பகத்தை (Fabless Chip Design Incubator - FabCI) ஹைதராபாத்தில் உள்ள இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம் (IIT – Indian Institute of Technology) அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் இலக்கு உலக அளவில் போட்டியிடக்கூடிய மற்றும் அறிவுசார் சொத்து உரிமைகளை உருவாக்கக்கூடிய குறைந்தது 50 ‘இந்தியாவில் தயாரிக்கும்’ சில்லு வடிவமைப்பு நிறுவனங்களை ஒன்று திரட்டுவதாகும்.
இந்தியாவில் பேப்லெஸ் சில்லு வடிவமைப்பு காப்பகத்தில் ஈடுபடுவது இதுவே முதல் முறையாகும். இது சில்லு வடிவமைப்பில் ஈடுபடும் புதிய நிறுவனங்களை சீர்படுத்துவதற்கான சூழலை உருவாக்குவதில் கவனத்தை செலுத்தும்.
மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (Meity - Ministry of Electronic and Information Technology) FabCI-ற்கு நிதி அளிக்கும். கேடன் டிசைன்ஸ் சிஸ்டம்ஸ், இன்க் மற்றும் ‘மென்டோர் கிராபிக்ஸ்’ ஆகிய நிறுவனங்கள் இதன் தொழில்நுட்ப பங்கீட்டு நிறுவனங்களாகும்.