பேம் - இந்தியா (FAME - India) திட்டம் - மீண்டும் ஆறுமாத காலத்திற்கு தள்ளிவைப்பு
September 9 , 2017 2677 days 2019 0
வேகமாகவும் மின்சக்தியிலும் ஓடும் கலப்பு வாகனங்களை தயாரிக்கும் திட்டமான பேம் இந்தியா திட்டம் மேலும் ஆறுமாத கால ஒத்திவைப்பைப் பெற உள்ளது. இத்திட்டம் கனரக இயந்திரங்கள் மற்றும் பொது நிறுவனங்கள் அமைச்சகத்தின் கீழ் உள்ளது.
இதன் முதல் கட்டம் ஏப்ரல் 2015 முதல் மார்ச் 2017 வரை இருந்தது. ஆனால் செப்டம்பர் 2017 மாதம் வரை ஆறுமாதம் நீட்டிப்பு பெற்றிருந்தது. தற்பொழுது மீண்டும் ஆறுமாத காலத்திற்கு மார்ச் 31,2018 வரை கால நீட்டிப்பு பெற்றுள்ளது.
பேம் - இந்தியாதிட்டம்பற்றி
பேம் - இந்தியா திட்டமானது 2020ம் ஆண்டிற்குள் ஆறு வருட கால அளவில் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது கலப்பு / மின்சக்தி வாகனங்களுக்கான சந்தைகளை மேம்படுத்த உதவுவதற்கு திட்டமிடப்பட்டது. நிர்ணயிக்கப்பட்ட கால அளவிற்குள் இத்திட்டம் உற்பத்திச் சூழ்நிலையில் ஒரு சுயச்சார்பை அடைவதற்கு நோக்கம் கொண்டிருக்கிறது. இத்திட்டம் நான்கு முக்கிய பகுதிகளை கொண்டது. தொழில்நுட்ப வளர்ச்சி, தேவையை உருவாக்குதல், மாதிரி திட்டங்கள், ஆற்றலுட்டும் உள்கட்டமைப்புகள்.