TNPSC Thervupettagam

பேரண்ட விரிவாக்க வீதத்தின் அளவீட்டு முரண்பாடு

April 21 , 2024 218 days 279 0
  • ஹப்பிள் டென்ஷன் எனப்படும் பேரண்ட விரிவாக்க வீதத்தின் அளவீடுகளில் உள்ள முரண்பாட்டிற்கு ஜெர்மனி மற்றும் ஐக்கியப் பேரரசினைச் சேர்ந்த அறிவியலாளர்கள் ஒரு விளக்கத்தினை முன்வைத்துள்ளனர்.
  • ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியின் (JWST) புதிய தரவுகளும் இந்த நீண்ட கால மர்மத்தை உறுதிப்படுத்துகின்றன.
  • இன்று உள்ள பேரண்டத்தின் விரிவாக்க வீதம் ஆனது ஆரம்பகாலப் பேரண்டத்தின் அடிப்படையில் எதிர்பார்க்கப்படும் வீதத்துடன் பொருந்தவில்லை.
  • ஆரம்பகட்டப் பேரண்டத்தின் கண்காணிப்பு தரவுகளைப் பயன்படுத்தி, அறிவியல் நிபுணர்கள் தற்போது எதிர்பார்க்கப்படும் விரிவாக்க வீதத்தைக் கணக்கிட முடியும்.
  • அவர்கள் "ஸ்டாண்டர்ட் கேண்டில்" எனப்படுகின்ற சிறப்புப் பொருள்களைக் கொண்டு தற்போதைய விரிவாக்கத்தையும் நேரடியாக அளவிட முடியும்.
  • இந்த இரண்டு மதிப்புகளையும் ஒப்பிடும் போது, இரண்டு தரவுகளும் குறிப்பிடத்தக்க அளவில் உடன்படவில்லை.
  • H0 என குறிக்கப்படும் ஹப்பிள் மாறிலியானது, பேரண்டத்தின் விரிவாக்கத்தின் காரணமாக அண்டங்கள் ஒன்றையொன்று விட்டு நகர்ந்து செல்லும் வீதத்தினை விவரிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்