TNPSC Thervupettagam

பேரண்டத்தின் பழமையான பால்வெளி மண்டலம்

July 30 , 2022 723 days 477 0
  • உலகின் மிகவும் சக்திவாய்ந்த ஒரு தொலைநோக்கியான ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலை நோக்கி பேரண்டத்தின் மிகப் பழமையான பால்வெளி மண்டலத்தினைக் கண்டுபிடித்துள்ளது.
  • பேரண்டமானது பால்வெளி மண்டலம் சார்ந்த கூறுகளின் அடிப்படையில் ஓர் ஆரம்ப நிலையாகக் கருதப் படுகின்ற, வெறும் 300 மில்லியன் ஆண்டுகள் பழமையானதாக இருந்த போது இருந்த அண்டங்களை இந்தத் தொலைநோக்கி கண்டறிந்துள்ளது.
  • இது பேரண்டத்தின் GLASS-z11 மற்றும் GLASS-z13 ஆகிய இரு பழமையானப் பால்வெளி மண்டலங்களைக் கண்டறிந்தது.
  • நமது பால்வெளி மண்டலம் உருப்பெற்ற தருணமான பெருவெடிப்பிற்குப் பிறகான முதல் சில நூறு மில்லியன் ஆண்டுகளில் அங்கு இடம் பெற்றிருப்பதாக உறுதி செய்யப் பட்ட ஒரே அண்டம் GNz11 ஆகும்.
  • GLASS-z13 அண்டத்திலிருந்து வெளிவரும் ஒளியானது விண்கலத்தின் கண்ணாடிகளில் மோதுவதற்குச் சுமார் 13.4 பில்லியன் ஆண்டுகள் எடுத்துக் கொண்டுள்ளது.
  • இது பூமியிலிருந்துச் சுமார் 15,00,000 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்