TNPSC Thervupettagam

பேரறிஞர் அண்ணா பிறந்த தினம் - செப்டம்பர் 15

September 15 , 2019 1841 days 1020 0
  • முன்னாள் முதலமைச்சரும் திராவிடத் தலைவருமான சி.என். அண்ணாதுரையின் 111வது பிறந்த நாளானது செப்டம்பர் 15 ஆம் தேதி அனுசரிக்கப்பட்டது.

  • அவரது குறிப்பிடத்தக்க சாதனைகள்: 
    • மதராஸ் மாநிலத்தைத் தமிழ்நாடு என்று பெயர் மாற்றியது
    • வேதச் சடங்குகளை மறுக்கும் "சுய மரியாதைத்" திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கியது.
    • தமிழ்நாட்டில் இரு மொழிக் கொள்கையை அறிமுகப்படுத்தியது.
    • முழு பெரும்பான்மையுடன் காங்கிரஸ் கட்சி அல்லாத முதலாவது முதல்வர்.
  • 1969 ஆம் ஆண்டில், அவரது இறுதிச் சடங்கானது உலகின் இரண்டாவது மிகப்பெரிய உலகச் சாதனையாக தற்பொழுதும் விளங்குகின்றது.
  • அவரது இறுதி ஊர்வலத்தில் 1.5 கோடி மக்கள் கலந்து கொண்டதாக கின்னஸ் சாதனைப் புத்தகம் தெரிவிக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்