டைட்டானிக் கப்பலின் சிதைவுகளை காண்பதற்கான பயணத்தில் ஐந்து பேரை ஏற்றிச் சென்ற ஆழ்கடல் நீர்மூழ்கிக் கப்பலானது "பேரழிவுகரமான ஒரு உள்நோக்கிய அழுத்த வெடிப்பினால்" துண்டு துண்டாக வெடித்துச் சிதறியது.
டைட்டன் எனப்படும் இந்த நீர்மூழ்கிக் கப்பலானது, அமெரிக்காவைச் சேர்ந்த ஓஷன் கேட் எக்ஸ்பெட்டிஷன்ஸ் என்ற நிறுவனத்தினால் இயக்கப்பட்டது.
டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலில், அதனை இயக்கிய அந்த நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஸ்டாக்டன் ரஷ் உட்பட ஐந்து பேர் இருந்தனர்.
1912 ஆம் ஆண்டு தனது முதல் பயணத்தின் போது பனிப்பாறையில் மோதி மூழ்கிய RMS டைட்டானிக் கப்பலில் இருந்த 1,500 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்.
டைட்டானிக் கப்பல் மூழ்கிக் கிடக்கும் ஆழத்தில், ஒரு சதுர அங்குலத்திற்கு சுமார் 5,600 பவுண்டுகள் அழுத்தம் உள்ளது.
ஒரு பேரழிவுகரமான உள்நோக்கிய அழுத்த வெடிப்பு என்பது, ஒரு மில்லி வினாடிக்கு உள்ளாகவே நிகழக்கூடிய "மிக விரைவான" வெடிப்பு நிகழ்வாகும்.