TNPSC Thervupettagam

பேராசிரியர் C.R. ராவ் நூற்றாண்டு நினைவுத் தங்கப்பதக்கம்

August 7 , 2021 1083 days 505 0
  • இந்தியப் பொருளாதாரக் கழக அறக்கட்டளையானது பேராசிரியர் C.R. ராவ் நூற்றாண்டு நினைவுத் தங்கப்பதக்க விருதிற்கு இரண்டு புகழ்பெற்றப் பொருளாதார வல்லுநர்களைத் தேர்வு செய்துள்ளது.
  • புகழ்பெற்ற பொருளாதார வல்லுநர்கள் ஜகதீஷ் பகவதி மற்றும் C. ரங்கராஜன் ஆகியோருக்கு முதலாவது பேராசிரியர் C.R. ராவ் நூற்றாண்டு நினைவு தங்கப்பதக்க விருதானது வழங்கப்பட்டது.
  • பகவதி அவர்கள் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம், சட்டம் மற்றும் பன்னாட்டு உறவுகள் ஆகிய துறைகளின் பேராசிரியர் ஆவார்.
  • C. ரங்கராஜன் அவர்கள் பிரதமருக்கான பொருளாதார ஆலோசகக் குழுவின் முன்னாள் தலைவரும், இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரும் ஆவார்.
  • இது அளவீட்டுப் பொருளாதாரம் மற்றும் அதிகாரப்பூர்வப் புள்ளி விவரங்களின் தத்துவார்த்தமான மற்றும் பயன்பாட்டு அம்சங்கள் துறையில் வாழ்நாள் அளவிலான பங்களிப்பினை ஆற்றிய ஓர் இந்திய அல்லது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வல்லுநருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை வழங்கப்படும் விருதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்