TNPSC Thervupettagam

பேரிடரைத் தாங்கக் கூடிய நெகிழ்திறன்மிக்க உள்கட்டமைப்பிற்கான கூட்டணியில் ஐரோப்பிய முதலீட்டு வங்கி

July 30 , 2022 724 days 331 0
  • ஐரோப்பிய முதலீட்டு வங்கியானது, சமீபத்தில் பேரிடரைத் தாங்கக் கூடிய நெகிழ் திறன் மிக்க உள்கட்டமைப்பிற்கான கூட்டணியில் இணைந்துள்ளது.
  • இந்தக் கூட்டணியானது இந்தியாவின் தலைமையில் இயங்குகிறது.
  • பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் அழிவைக் கட்டுப்படுத்தச் செய்யும் நோக்கில் இந்தக் கூட்டணியானது நிறுவப் பட்டுள்ளது.
  • ஐரோப்பிய முதலீட்டு வங்கியானது இந்தக் கூட்டணியின் உறுப்பினர் நாடுகளுக்கு ஆலோசனை மற்றும் நிதி உதவியை வழங்கும்.
  • ஐரோப்பிய முதலீட்டு வங்கியானது இந்தக் கூட்டணியில் "ஐரோப்பிய ஒன்றியப் பருவ நிலை வங்கியாக" செயல்படும்.
  • பேரிடரைத் தாங்கக் கூடிய நெகிழ்திறன்மிக்க உள்கட்டமைப்பிற்கான கூட்டணி,  2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் பருவநிலை நடவடிக்கைக்கான உச்சி மாநாட்டில் இந்திய நாட்டினால் தொடங்கப் பட்டது.
  • இது உறுப்பினர் நாடுகளுக்கு அறிவுசார்ந்த தகவல்கள் மற்றும் வளங்களைப் பகிர்ந்து கொள்ளவும், ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைய நாடுகளுக்கு உதவவும் வேண்டி வழி வகுக்கிறது.
  • ஐரோப்பிய முதலீட்டு வங்கி என்பது ஐரோப்பிய ஒன்றியத்தின் முதலீட்டு வங்கியாகும்.
  • இதன் உரிமம் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர்  நாடுகளிடம் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்