தெலுங்கானா மாநில அரசானது முதன்முறையாக தலைநகரான ஹைதராபாத்தில் பேரிடர் பதிலெதிர்ப்புப் படைக்கான (DRF - Disaster Response Force) வாகனங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
அவசர சூழ்நிலைகளின் போது விரைவாக நடந்து கொள்வதற்காக தனது சொந்த பேரிடர் படையைப் பயன்படுத்தும் நோக்கத்துடன் அம்மாநில அரசு பேரிடர் பதிலெதிர்ப்புப் படையை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தப் படைக்கு வழங்கப்பட்டுள்ள DRF வாகனங்கள் கிரேட்டர் ஹைதராபாத் நகராட்சி நிறுவனத்தின் 24 இடங்களில் நிறுத்தப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.