தற்போதுள்ள 2005 ஆம் ஆண்டு பேரிடர் மேலாண்மைச் சட்டம் என்ற சட்டத்தினைத் திருத்திய்மைப்பதற்காக 2024 ஆம் ஆண்டு பேரிடர் மேலாண்மை (திருத்தம்) என்ற மசோதாவினை மக்களவை நிறைவேற்றியுள்ளது.
இதன் முக்கிய முன்மொழிவுகள்
தேசிய மற்றும் மாநில அளவில் பேரிடர் தரவுத் தளங்களை உருவாக்குதல்
மாநில தலைநகர் மற்றும் மாநகராட்சிக் கழகங்கள் கொண்ட மிகவும் பெரிய நகரங்களுக்கான நகர்ப்புற பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் கட்டமைப்பு, மற்றும்
மாநில அரசுகளில் மாநிலப் பேரிடர் மீட்புப் படையினை உருவாக்குதல்.
இந்த மசோதா தேசிய நெருக்கடி மேலாண்மைக் குழு (NCMC) மற்றும் உயர்மட்டக் குழு (HLC) போன்ற தற்போதைய அமைப்புகளுக்கு ஒரு சட்டப்பூர்வ அந்தஸ்தினை வழங்கச் செய்கிறது.