மாநிலங்களவையானது, 2024 ஆம் ஆண்டு பேரிடர் மேலாண்மை திருத்த மசோதா என்ற மசோதாவினை நிறைவேற்றியுள்ளது.
இது தேசிய இடர்/நெருக்கடி மேலாண்மைக் குழு (NCMC) மற்றும் உயர் மட்டக் குழு (HLC) போன்ற தற்போதைய அமைப்புகளுக்கு சட்டப்பூர்வ அந்தஸ்தினை வழங்குகிறது.
ஒரு நகராட்சிக் கழகத்துடன் இணைந்து, மாநிலத் தலைநகரங்களிலும் நகரங்களிலும் ஒரு தனி ஆணையத்தினை உருவாக்க மாநில அரசாங்கங்களுக்கு இது அதிகாரம் அளிக்கிறது.
இது மத்திய அரசின் முன் கூட்டிய ஒப்புதலுடன், அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் எண்ணிக்கை மற்றும் வகையைக் குறிப்பிடுவதற்குத் தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கு அதிகாரம் அளிக்கிறது.
இது பேரிடர் அபாயங்களின் தொடர் மறு ஆய்வு, மிகவும் குறைந்தபட்சமான நிவாரண தரங்களுக்கான வழிகாட்டுதல்களை நிர்ணயித்தல், தேசிய மற்றும் மாநிலப் பேரிடர் தரவுத் தளங்களை உருவாக்குதல் போன்ற புதியச் செயல்பாடுகளை உள்ளடக்கியது.