2005 ஆம் ஆண்டு பேரிடர் மேலாண்மைச் சட்டம் ஆனது பேரிடர்களைத் திறம்பட மேலாண்மை செய்வதற்காக இயற்றப்பட்டது.
2024 ஆம் ஆண்டு பேரிடர் மேலாண்மை (திருத்தம்) மசோதாவானது மக்களவையில் அறிமுகப் படுத்தப்பட்டது.
இந்த மசோதாவானது "தேசிய மற்றும் மாநில அளவிலான பேரிடர் தரவுத் தளத்தினை" உருவாக்க முயல்கிறது.
டெல்லி மற்றும் சண்டிகர் ஒன்றியப் பிரதேசங்களைத் தவிர, மாநிலத் தலைநகரங்கள் மற்றும் பெரிய நகரங்களைக் கொண்ட மாநகராட்சிக் கழகங்களுக்கு "நகர்ப்புறப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தினை" அமைப்பதற்கும் இது வழிவகை செய்கிறது.
அதிகரித்து வரும் பேரிடர் அபாயங்கள் உட்பட, நாட்டில் ஏற்படும் அனைத்து வகையான பேரழிவு அபாயங்களை அவ்வப்போது கணக்கெடுப்பதற்கு பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கு இந்த மசோதா அதிகாரம் அளிக்கிறது.
இது "நடந்திருக்காத ஆனால் தீவிரப் பருவநிலை நிகழ்வுகள் மற்றும் பல்வேறு பிற காரணிகளால் எதிர்காலத்தில் ஏற்படக் கூடியப் பேரழிவுகளின் அபாயங்கள்" போன்ற சிலவற்றை உள்ளடக்கியது.