பேரிடர்களின் மனித விலை 2000-2019 அறிக்கை
October 17 , 2020
1500 days
710
- இந்த அறிக்கையானது பேரிடர் அபாயக் குறைப்பிற்கான ஐக்கிய நாடுகள் அலுவலகத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.
- இந்த அறிக்கையானது உயிரியல் பேரிடர்கள் மற்றும் கொரானா நோய்த் தொற்று போன்ற நோய் தொடர்பான பேரிடர்களை ஆய்வு செய்யவில்லை.
சிறப்பம்சங்கள்
- காலநிலையானது கடந்த 20 ஆண்டுகளில் இயற்கைப் பேரிடர்கள் இரட்டிப்பாவதற்குக் காரணமாக இருந்துள்ளது.
- 2000 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளுக்கு இடையே ஏற்பட்ட 7348 பேரிடர் நிகழ்வுகள் 4.2 பில்லியன் மக்களைப் பாதித்துள்ளது.
- 4212ற்கு மேற்பட்ட இயற்கைப் பேரிடர்கள் 1980 மற்றும் 1999 ஆகிய ஆண்டுகளுக்கு இடையே நிகழ்ந்துள்ளன.
- 6681 காலநிலை தொடர்பான பேரிடர்கள் 2000-19 காலத்தில் பதிவாகியுள்ளன. இதற்கு முந்தைய 20 ஆண்டு காலத்தில் 3656 நிகழ்வுகள் பதிவாகியிருந்தன.
- முக்கியமான வெள்ள நிகழ்வுகள் இரட்டிப்பாகி, 3254 ஆக உள்ளன. கடந்த 20 ஆண்டு காலத்தில் புயல்கள் 1457 ஆக அதிகரித்து (முன்பு இருந்ததை விட) 2034 ஆக உள்ளன.
- சீனாவிற்கு அடுத்து வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட 2வது நாடு இந்தியாவாகும்.
- கடுமையான வெப்பம் மிகக் கொடுமையான ஒன்றாக உள்ளது.
- இந்தியாவில் 2015 ஆம் ஆண்டின் அனல் காற்றினால் 2248 இறப்புகள் ஏற்பட்டுள்ளன.
- இந்த தரவானது ஆசியாவானது கடந்த 20 ஆண்டில் 3068 பேரிடர்களுடன் அதிக எண்ணிக்கையிலான பேரிடர்களினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றது. இதற்கு அடுத்து அமெரிக்கா 1756 பேரிடர்களுடனும் ஆப்பிரிக்கா 1192 பேரிடர்களுடனும் பாதிப்பைச் சந்தித்துள்ளன.
- பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் 577 பேரிடர்களுடன் சீனா முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்து 467 பேரிடர்களுடன் அமெரிக்காவும் 321 பேரிடர்களுடன் இந்தியாவும் தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளன.
Post Views:
710