“சீட்ஸ்” (SEEDS) என்ற அமைப்பால் வெளியிடப்பட்ட “பேரிடர்கள் முகம் 2019” என்ற அறிக்கையின்படி “சராசரி” மழைப் பொழிவு தகவல்களானது நாடெங்கிலும் நிலவும் கடுமையான வெள்ளம் மற்றும் வறட்சி ஆகியவற்றை முழுமையாகக் காட்டுவதில்லை என்று கூறப்பட்டுள்ளது.
“நீடித்த சுற்றுச் சூழல் மற்றும் சூழலியல் வளர்ச்சி சமூகத்தின்” அறிக்கையானது இந்திய வானிலையியல் அமைப்பினால் பயன்படுத்தப்படும் “வழக்கமான மழைப்பொழிவு” அல்லது “சராசரி மழைப்பொழிவு” போன்ற சொற்கூறுகள் நாடு முழுவதும் மற்றும் மாநிலங்களில் ஏற்படும் மழைப்பொழிவு மாறுபாடுகளைக் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை என்பதைக் கண்டறிந்துள்ளது.
இது 2018 ஆம் ஆண்டில் ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான பருவமழைக் காலத்தின்போது, பஞ்சாபில் “வழக்கமான மழைப் பொழிவு” நிகழ்ந்ததை உறுதி செய்கின்றது.
ஆனால் பஞ்சாபின் ஒரு பகுதியானது (ரூபார்) 71 சதவிகித மழையையும் மற்றொரு பகுதியானது (பெரோஸ்பூர்) 74 சதவிகிதம் குறைவான மழைப் பொழிவையும் பெற்றுள்ளது.