TNPSC Thervupettagam

பேறுகாலத் தாய்மார்கள் இறப்பு விகிதம்

December 11 , 2022 718 days 474 0
  • தமிழகத்தில் 2017-19 ஆம் ஆண்டில் 58 ஆக இருந்த பேறுகாலத் தாய்மார்கள் இறப்பு விகிதம் ஆனது 2018-20 ஆம் ஆண்டில் ஒரு லட்சம் பிறப்புகளுக்கு 54 ஆகக் குறைந்து உள்ளது.
  • தமிழக மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு பேறுகாலத் தாய்மார்கள் இறப்பிற்கும் அதன் நான்கு நிலைகளில் (சமூகம், மருத்துவமனை, வருவாய் ஆய்வாளர் அலுவலகம் மற்றும் நிபுணர் குழு) இறப்புத் தணிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
  • மகப்பேற்றுக்கு பிறகான இரத்தப் போக்கு (PPH) மற்றும் கர்ப்பத்தினால் ஏற்படும் உயர் இரத்த அழுத்தம் ஆகியவை தமிழகத்தில் பதிவாகும் பேறுகாலத் தாய்மார்கள் இறப்புகளுக்கான முக்கிய காரணங்களாகும்.
  • தென் மாநிலங்களில், ஒரு லட்சம் பிறப்புகளுக்கு 19 இறப்புகளுடன் கேரளாவில் மிகக் குறைந்த பேறுகாலத் தாய்மார்கள் இறப்பு விகிதம் பதிவாகியுள்ளது.
  • அதைத் தொடர்ந்து தெலுங்கானா (43), மற்றும் ஆந்திரப் பிரதேசம் (45) ஆகியவை இடம் பெற்றுள்ள அதே சமயம் கர்நாடகா 69 பேறுகாலத் தாய்மார்கள் இறப்பு விகிதத்துடன் தமிழகத்திற்கு அடுத்த இடத்தில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்