தமிழகத்தில் 2017-19 ஆம் ஆண்டில் 58 ஆக இருந்த பேறுகாலத் தாய்மார்கள் இறப்பு விகிதம் ஆனது 2018-20 ஆம் ஆண்டில் ஒரு லட்சம் பிறப்புகளுக்கு 54 ஆகக் குறைந்து உள்ளது.
தமிழக மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு பேறுகாலத் தாய்மார்கள் இறப்பிற்கும் அதன் நான்கு நிலைகளில் (சமூகம், மருத்துவமனை, வருவாய் ஆய்வாளர் அலுவலகம் மற்றும் நிபுணர் குழு) இறப்புத் தணிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
மகப்பேற்றுக்கு பிறகான இரத்தப் போக்கு (PPH) மற்றும் கர்ப்பத்தினால் ஏற்படும் உயர் இரத்த அழுத்தம் ஆகியவை தமிழகத்தில் பதிவாகும் பேறுகாலத் தாய்மார்கள் இறப்புகளுக்கான முக்கிய காரணங்களாகும்.
தென் மாநிலங்களில், ஒரு லட்சம் பிறப்புகளுக்கு 19 இறப்புகளுடன் கேரளாவில் மிகக் குறைந்த பேறுகாலத் தாய்மார்கள் இறப்பு விகிதம் பதிவாகியுள்ளது.
அதைத் தொடர்ந்து தெலுங்கானா (43), மற்றும் ஆந்திரப் பிரதேசம் (45) ஆகியவை இடம் பெற்றுள்ள அதே சமயம் கர்நாடகா 69 பேறுகாலத் தாய்மார்கள் இறப்பு விகிதத்துடன் தமிழகத்திற்கு அடுத்த இடத்தில் உள்ளது.