TNPSC Thervupettagam

பேறுகாலத் தாய்மார்கள் உயிரிழப்பு 2000-2023 அறிக்கை

April 11 , 2025 8 days 104 0
  • 'பேறுகாலத் தாய்மார்கள் உயிரிழப்பு பதிவில் உள்ளப் போக்குகள் 2000-2023' என்ற தலைப்பிலான அறிக்கையானது, WHO, UNICEF, UN மக்கள்தொகை நிதியம், உலக வங்கி மற்றும் UN பொருளாதார மற்றும் சமூக விவகாரங்கள் துறை (மக்கள்தொகைப் பிரிவு) ஆகியவற்றால் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
  • நைஜீரியாவில் மிக அதிக எண்ணிக்கையிலான பேறுகாலத் தாய்மார்கள் உயிரிழப்பு பதிவாகியுள்ளன என்பதோடு மேலும் 2023 ஆம் ஆண்டில் மதிப்பிடப்பட்ட உலகளாவிய 'பேறுகாலத் தாய்மார்கள் உயிரிழப்புகளில் கால் பங்கிற்கும் அதிகமானவை (சுமார் 28.7 சதவீதம்), தோராயமாக 75,000 உயிரிழப்புகள் இங்கு பதிவானவை ஆகும்.
  • 2023 ஆம் ஆண்டில், இந்திய நாடானது சுமார் 19,000 உயிரிழப்புகளுடன் கூடிய காங்கோ ஜனநாயகக் குடியரசிற்கு (DRC) சமமாக உலகிலேயே மிகவும் அதிக எண்ணிக்கையில் 'பேறுகாலத் தாய்மார்கள் உயிரிழப்புகள் பதிவான இரண்டாவது நாடாக இடம் பெற்று உள்ளதோடு நைஜீரியாவிற்கு அடுத்தபடியாகவும் அது இடம் பெற்றுள்ளது.
  • இது ஒவ்வொரு நாளும் 52 உயிரிழப்புகளாகப் பதிவானது.
  • இந்தியாவின் 'பேறுகாலத் தாய்மார்கள் உயிரிழப்பு விகிதம் (MMR) ஆனது, 2000 ஆம் ஆண்டில் 362 ஆக இருந்தது என்பதோடு இது 2023 ஆம் ஆண்டில் 80 ஆகக் குறைந்தது என்ற நிலையில் இது அந்தக் காலக் கட்டத்தில் 78 சதவீதக் குறைவைக் குறிக்கிறது.
  • இந்த நான்கு நாடுகளும் ஒரு சேர, 2023 ஆம் ஆண்டில் உலகளாவியப் பேறுகாலத் தாய்மார்கள் உயிரிழப்பு விகிதத்தில் சுமார் பாதி (47 சதவீதம்) பங்கினைக் கொண்டு உள்ளன.
  • 2023 ஆம் ஆண்டில் சீனாவில் சுமார் 1,400 பேறு காலத் தாய்மார்கள் உயிரிழப்புகள் மட்டுமே பதிவானது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்