TNPSC Thervupettagam

பை (π) தினம் – மார்ச் 14

March 15 , 2019 2024 days 851 0
  • உலகெங்கிலும் மார்ச் 14 அன்று பை தினம் அனுசரிக்கப்படுகிறது. இதன் தோராயமான மதிப்பு 3.14159 ஆகும்.
  • பை (கிரேக்க வார்த்தை: π ) என்பது வட்டத்தின் பரிதிக்கும் அதன் விட்டத்திற்கும் உள்ள விகித மாறிலியைக் குறிப்பதற்காக கணிதத்தில் பயன்படுத்தப்படும் ஒரு குறியீடாகும்.
  • 2009 ஆம் ஆண்டு மார்ச் 12 அன்று அமெரிக்க காங்கிரஸ் பிரதிநிதிகள் கட்டுப்பாடு விதிக்காத ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினர். மேலும் 2009 ஆம் ஆண்டு மார்ச் 14 அன்று தேசிய பை தினத்தை அவர்கள் அங்கீகரித்தனர்.
  • 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முழுவதும் சிலரால் பை தினம் (3/14) அனுசரிக்கப்பட்டது.
  • 2015 ஆம் ஆண்டு மார்ச் 14 ஆம் தேதி “சிறந்த பை தினமாக” அனுசரிக்கப்பட்டது.
  • பை தோராய தினம் ஜூலை 22 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. அது முதல் 22/7 என்ற பின்னமானது π-ன் பொதுவான தோராயமாக அனுசரிக்கப்படுகிறது.
  • தவ் தினம் என்று அழைக்கப்படும் இரு பை தினமானது ஜூலை 28 அன்று அனுசரிக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்