பைகா என்ற எளிதில் பாதிக்கப்படக் கூடிய பழங்குடியினர் குழு (PVTG) சத்தீஸ்கர் மாநிலத்தில் வாழ்விட உரிமைகளைப் பெற்ற இரண்டாவது குழுவினர் ஆக மாறி உள்ளனர்.
6,483 மக்கள் (2,085 குடும்பங்கள்) கொண்ட மொத்தம் 19 பைகா கிராமங்களுக்கு வாழ்விட உரிமை வழங்கப்பட்டுள்ளது.
வாழ்விட உரிமைகளுக்கான அங்கீகாரமானது, ஒரு சமூகத்திற்கு அவர்களின் வழக்கமான வாழ்விடங்கள், சமூக-கலாச்சார நடைமுறைகள், பொருளாதார மற்றும் வாழ்வாதார வழிமுறைகள், பல்லுயிர் பெருக்கம் மற்றும் சூழலியல் பற்றிய அறிவுசார் அனுபவம், இயற்கை வளங்களைப் பயன்படுத்துவதற்கான பாரம்பரிய அனுபவம், அத்துடன் அவர்களின் இயற்கை மற்றும் கலாச்சார பாரம்பரியங்களைப் பாதுகாத்தல் மற்றும் வளங்காத்தல் ஆகியவை தொடர்பான உரிமைகளை வழங்குகிறது.
வாழ்விட உரிமைகளானது பாரம்பரிய வாழ்வாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் அறிவைப் பாதுகாத்து மேம்படுத்துகின்றன.
2006 ஆம் ஆண்டு வன உரிமைகள் சட்டத்தின் 3(1) (e) என்ற பிரிவின் கீழ் PVTG குழுக்களுக்கு வாழ்விட உரிமைகள் வழங்கப்படுகின்றன.
முன்னதாக கமர் பழங்குடியினர் குழுவிற்கு அம்மாநிலத்தில் வாழ்விட உரிமைகள் வழங்கப் பட்டது.