TNPSC Thervupettagam
April 7 , 2021 1238 days 638 0
  • சமீபத்தில்  ரஷ்ய அறிவியலாளர்கள் பைக்கால் – GVD (Gigaton Volume Detector) எனப்படும் நீருக்கு அடியில் அமைந்த உலகின் மிகப்பெரிய நியூட்ரினோ தொலைநோக்கியை பைக்கால் ஏரியில் அமைத்தனர்.
  • பைக்கால் ஏரி சைபீரியாவில் அமைந்துள்ள உலகின் மிகவும் ஆழமான ஏரியாகும்.
  • இது உலகிலுள்ள நியூட்ரினோக்களைக் கண்டறியும் மூன்று மிகப்பெரிய தொலைநோக்கிகளுள் ஒன்றாகும்.
  • மற்ற இரண்டு தொலை நோக்கிகள்,
    • தென் துருவத்தில் அமைந்துள்ள ஐஸ்கியூப் (Ice cube) மற்றும்
    • மத்தியத் தரைக்கடலில் அமைந்துள்ள (ANTARES) அன்டாரீஸ் ஆகியனவாகும்.
  • இந்தத் தொலைநோக்கி நியூட்ரினோக்கள் எனப்படும் கண்ணுக்குப் புலப்படாத அடிப்படைப் பொருட்களை (துகள்களை) விரிவாக ஆய்வு செய்யவும் அதற்கான மூலப்பொருளைத் தீர்மானிக்கவும் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்