TNPSC Thervupettagam

பைரிகுலேரியா Spp தொற்று

February 12 , 2025 10 days 81 0
  • இந்திய வேளாண் ஆராய்ச்சி சபையின் இந்திய நறுமணப் பொருட்கள் ஆராய்ச்சி நிறுவனம் ஆனது, இஞ்சிப் பயிர்களை கடுமையாகப் பாதிக்கின்ற பைரிகுலேரியா Spp என்ற புதியப் பூஞ்சைத் தொற்று நோயை அடையாளம் கண்டுள்ளது.
  • பைரிகுலேரியா Spp என்பது ஒரு பூஞ்சை நோய்க் கிருமியாகும் என்பதோடு இது இஞ்சி சாகுபடிக்கு ஒரு புதிய அச்சுறுத்தலாக ஒரு பெருந்தொற்றினை ஏற்படுத்துகிறது.
  • பைரிகுலேரியா ஆனது அரிசி, கோதுமை மற்றும் பார்லி போன்ற சில ஒருவித்திலைத் தாவரங்களில் தொற்றுகளை ஏற்படுத்துவதற்காக நன்கு அறியப்பட்ட கிருமியாகும்.
  • 2024 ஆம் ஆண்டில் கர்நாடகாவின் குடகு மாவட்டத்தின் சில பகுதிகளில் பயிரிடப்பட்ட இஞ்சி பயிரில் பைரிகுலேரியா பாதிப்பு முதன்முறையாக பதிவாகியுள்ளது.
  • இந்தத் தொற்று ஏற்பட்டவுடன், அது வேகமாகப் பரவி, சில மணி நேரங்களுக்குள் முழு வயலையும் தாக்கும்.
  • 10 மணி நேரத்தில், சில பாதிக்கப்பட்ட வயல்கள் மூலம் 20 கி.மீ இடைவெளியில் அமைந்துள்ள பெரிய பகுதிகளையும் இது தாக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்