TNPSC Thervupettagam
August 5 , 2022 717 days 613 0
  • டெஹ்ராடூனில் உள்ள மத்திய அறிவியல் மற்றும் தொழில்துறை சபையின் இந்தியப் பெட்ரோலியக் கழகமானது, சுற்றுச்சூழலில் இருந்து நச்சு, மறுசுழற்சிக்கு உட்படாத மற்றும் புற்றுநோயை உருவாக்கும் பாலிசைக்ளிக் நறுமண ஹைட்ரோகார்பன்களை (PAHs) அகற்றும் திறன் கொண்ட ஒரு பூஞ்சையை அடையாளம் கண்டுள்ளது.
  • அவர்கள் டி.மாக்ஸிமா எனப்படும், பைரின் நுண்ணுயிர் சிதைவை ஏற்படுத்தும் திறன் கொண்ட வெள்ளை நிற அழுகல் பூஞ்சையை அடையாளம் கண்டுள்ளனர்.
  • இறந்தத் தாவரங்களில் வளரும் இந்தப் பூஞ்சையானது சிறப்பு நொதிகளைப் பயன்படுத்தி பைரீன் சிதைவை ஏற்படுத்துகிறது.
  • இந்தப் பூஞ்சை நுண்ணுயிர்ச் சிதைவை ஏற்படுத்துவதன் மூலம் மண்ணின் தரத்தை மேம்படுத்துகிறது.

பாலிசைக்ளிக் நறுமண ஹைட்ரோகார்பன்கள்

  • பாலிசைக்ளிக் நறுமண ஹைட்ரோகார்பன்கள் (PAHs) என்பது நிலக்கரி, கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலில் இயற்கையாகக் காணப்படும் இரசாயனங்களின் ஒரு வகையாகும்.
  • இவை நிலக்கரி, எண்ணெய், எரிவாயு, மரம், குப்பை மற்றும் புகையிலை ஆகியவற்றை எரிப்பதன் விளைவால் வெளிப்படுகிறது.
  • இவை காற்றில் ஒன்றோடொன்று பிணைந்து சிறியத் துகள்களை உருவாக்கும்.
  • இறைச்சி மற்றும் பிற உணவுகளை சமைக்கும் போது உருவாகும் அதிக வெப்பமானது இதனை உருவாக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்