TNPSC Thervupettagam

பைரோகுமுலோனிம்பஸ் மேகம்

August 14 , 2024 101 days 136 0
  • தற்போது அமெரிக்கா மற்றும் கனடாவில் பரவி வரும் காட்டுத் தீயானது, ‘பைரோ குமுலோனிம்பஸ்’ மேகங்களை உருவாக்கும் அளவுக்கு தீவிரமாகியுள்ளன.
  • அவை இடியை உருவாக்கி அதிக தீயை மூட்டக் கூடிய ஆற்றல் கொண்டவை.
  • 2023 ஆம் ஆண்டிற்கு முன்னதாக, உலகளவில் சராசரியாக ஓராண்டில் 102 பைரோ குமுலோனிம்பஸ் மேகங்களின் உருவாக்கங்கள் பதிவு செய்யப்பட்டன, அவற்றில் 50 மேகங்கள் கனடாவில் மட்டுமே பதிவாகின.
  • அதிக வெப்பமான காட்டுத் தீ ஏற்படும் போது மட்டுமே அவை ஏற்படுகின்றன.
  • எரிமலை வெடிப்புகளும் பைரோகுமுலோனிம்பஸ் மேகங்கள் உருவாக வழி வகுக்கும்.
  • உதாரணமாக, இந்த மேகங்கள் ஆனது 2019-2020 ஆஸ்திரேலிய காட்டுத்தீயின் போது வெப்பநிலை 800 டிகிரி செல்சியஸைத் தாண்டியபோது உருவானது.
  • இந்த மேகங்கள் 50,000 அடி உயரத்தை எட்டி, அவை தானாகவே தனது இடி உருவாக்கும் மேகங்களை உருவாக்குகின்றன.
  • இந்த மேகங்கள் ஆனது மின்னலை உருவாக்கக் கூடியதாக இருந்தாலும் அதிக மழைப் பொழிவினை உருவாக்காது.
  • இதன் விளைவாக, அவை பிரதானமாக உருவான தீயிலிருந்து பல கிலோமீட்டர் தொலைவில் புதிய காட்டுத்தீயினை உருவாக்கலாம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்