ஓமைக்ரான் வைரசின் BA.2.86 மாற்றுருவானது "பைரோலா" என்று பெயரிடப் பட்டு உள்ளது.
இது புதிதாக அறிவிக்கப்பட்ட, ஓமைக்ரான் வைரசின் மிகவும் பிறழ்ந்த ஒரு மாற்றுரு ஆகும் என்பதோடு இது பாதிப்புகளின் எண்ணிக்கையினை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் சில பகுதிகளில் பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், புதிய கொரோனா வைரஸ் மாற்றுருகள் உலகம் முழுவதும் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளன.
பைரோலாவில் மாற்றுருவில் 30க்கும் மேற்பட்ட பிறழ்வுகள் உள்ளன.
இது முதன்முதலில் ஜூலை 24 ஆம் தேதியன்று டென்மார்க்கில் கண்டறியப் பட்டது.