TNPSC Thervupettagam

பொட்டாசியம் இருப்புக்கள்

February 12 , 2025 15 days 75 0
  • இந்தியப் புவியியல் ஆய்வு மையம் (GSI) நடத்திய ஆய்வுகள் ஆனது, இராஜஸ்தானின் சில பகுதிகளிலும் பொட்டாசியம் இருப்புப் பகுதிகளை அடையாளம் கண்டுள்ளன.
  • இராஜஸ்தானுக்கு அடுத்தபடியாக சில குறிப்பிடத்தக்க பொட்டாசியம் இருப்புகளைக் கொண்ட இரண்டாவது மாநிலம் பஞ்சாப் ஆகும்.
  • பொட்டாசியம் இருப்புகளைக் கொண்ட கபர்வாலா (முக்த்சர் சாஹிப்), ஷெர்வாலா மற்றும் ராம்சாரா (ஃபாசில்கா) மற்றும் ஷெர்கர் மற்றும் டால்மீர் கெரா (ஃபாசில்கா) ஆகிய மூன்று சுரங்கத் தொகுதிகள் சுமார் 18 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரவி உள்ளன.
  • பஞ்சாப்பின் இரண்டு மாவட்டங்களில் உள்ள சுரங்கங்கள் அதன் மேற்பரப்பிலிருந்து தோராயமாக 450 மீட்டர் கீழே அமைந்திருந்தன.
  • பொட்டாஷ் என்பது உரங்களில் முதன்மையாகப் பயன்படுத்தப்படும் ஒரு தாதுவான பொட்டாசியம் தாதுவினைக் கொண்டுள்ளது.
  • 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட பொட்டாஷ் ஆனது உரமாகப் பயன்படுத்தப்படுகிறது என்பத்தோடு இது N-P-K எனப்படும் மூன்று முதன்மை விவசாய ஊட்டச் சத்துக்களில் ஒன்றாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்