TNPSC Thervupettagam

பொட்டேமோபைலக்ஸ் கொரோனா வைரஸ்

April 27 , 2021 1182 days 628 0
  • உயிரியல் வல்லுநரான ஹலீஸ் இப்ராஹிமி என்பவர், தான் புதிதாகக் கண்டறிந்தப் பூச்சிக்கு கொரோனா வைரஸ் நினைவாக ஒரு பெயர் சூட்டியுள்ளார்.
  • இந்த பூச்சி இனங்கள் “Accursed Mountains” (சபிக்கப்பட்ட மலைகள்) பகுதிகளில் (கொசோவாவின் மேற்கத்திய ஜெஸ்கெத் இ நெமுனா தேசியப் பூங்கா) காணப் படுகின்றன.
  • இவற்றிற்கு தற்போது பொட்டேமோபைலக்ஸ் கொரோனா வைரஸ்எனப் பெயரிடப் பட்டுள்ளது.
  • இப்பூச்சி இனங்கள் இந்த தேசியப் பூங்கா பகுதியைச் சேர்ந்த பூர்வீக இனங்களாகும்.
  • இந்தப் புதிய பூச்சி இனங்கள் திறந்தவெளி மற்றும் கடல் மட்டத்திலிருந்து 2000 மீட்டர் வரையிலான உயர்மட்டப் பகுதிகளில் வாழும் சிறிய பூச்சிகளாகும்.
  • கேடிஸ்ஃப்ளை இனங்கள் (Caddisfly species) பற்றிய அவரது ஆய்வின் போது நீர்மின் நிலையம் கட்டப்பட்டதனால் டெகானிட் நதியானது கடுமையாக மோசமடைந்து வருவதையும் அறிவியலாளர்கள் கண்டறிந்தனர்.
  • அந்த நதியின் குறுக்கே நீர்மின் நிலையம் அமைப்பதால் ஏற்படும் விளைவானது, மனிதர்கள் மீது கொரோனா வைரஸ் ஏற்படுத்திய தாக்கத்திற்குச் சமமானதாகும்.
  • எனவே, அங்கு கண்டறியப்பட்ட இப்புதிய இனத்திற்கு கொரோனா வைரசின் பெயர் சூட்டப் பட்டுள்ளது.

டெகனைட் நதி

  • இது வொயிட் டிரின் நதியின் கிளை ஆறு ஆகும்.
  • வைசோகி டெகானியின் மடாலயம் டெகானைட் நதிக்கரையில் அமைந்துள்ளது.
  • இது ஒரு யுனெஸ்கோ உலகப் பாரம்பரியத் தளமாகும்.
  • இந்நதியானது அட்ரியாட்டிக் கடலில் கலக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்