TNPSC Thervupettagam
April 13 , 2018 2320 days 709 0
  • நியமனங்களுக்கான கேபினேட் குழுவானது (Appointments Committee of the Cabinet- ACC) மூத்த ஐபிஎஸ் அதிகாரியான ராஜேஸ் ரஞ்சன் அவர்களை மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் (Central Industrial Security Force- CISF) பொது இயக்குநராக  (Director General)  நியமித்துள்ளது.
  • 2020 ஆம் ஆண்டின் நவம்பர் 30-ஆம் தேதி வரை இவர் மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் பொது இயக்குநராக பதவியில் இருப்பார்.
  • 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மத்திய தொழில் பாதுகாப்புப் படையின்  பொது இயக்குநராக பணியாற்றி வந்த O.P சிங் உத்திரப் பிரதேச மாநிலத்தின்  மாநில காவல் துறையின் பொது இயக்குநராக பொறுப்பேற்றுக் கொண்டதால்  இப்பதவி சில மாதங்களாக நிரப்பப்படாமல் காலியாக இருந்து வந்தது.
மத்திய தொழில் பாதுகாப்புப் படை
  • புதுதில்லியில் தன்னுடைய தலைமையகத்தைக் கொண்டுள்ள மத்திய தொழில் பாதுகாப்புப் படையானது மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஓர் மத்திய ஆயுத காவல்படையாகும் (CAPF- central armed police force).
  • மத்திய தொழில் பாதுகாப்புப் படையானது தொடக்கத்தில் நாட்டின் பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாப்பதற்காக (PSUs-Public sector Undertakings) 1968-ஆம் ஆண்டு மத்திய தொழில் பாதுகாப்புப்படை சட்டத்தின் கீழ் (Central Industrial Security Force Act, 1968) உருவாக்கப்பட்டது.
  • எனினும் 1983-ஆம் ஆண்டு இச்சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின் (Amendment) மூலம், மத்திய தொழில் பாதுகாப்புப் படையானது பெரிய அதிகார பணி வரம்புடைய ஓர் ஆயுதப்படையாக (armed force) மாற்றப்பட்டது.
  • தீவிபத்துகளை எதிர்கொள்ள இப்படையில் தீ தடுப்புப்பிரிவு (Fire wing) ஒன்றும் உள்ளது.
  • இவை நாட்டின் பொதுத்துறை நிறுவனங்கள், அரசு அமைப்புகள் மற்றும் வி.ஐ.பிகளுக்கு பாதுகாப்பு வழங்குகின்றன. மேலும் மத்திய தொழில் பாதுகாப்புப் படையானது பேரிடர் மேலாண்மை பணிகளிலும் ஈடுபடுகின்றது.
       

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்