TNPSC Thervupettagam
April 13 , 2018 2320 days 1037 0
  • எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிப் பேராசிரியரான பல்ராம் பார்கவாவை  இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் (Indian Council of Medical Research-ICMR) பொது இயக்குநராகவும் (Director General),  மத்திய சுகாதார ஆராய்ச்சித் துறையின் (Department of Health Research)  செயலாளராகவும் மத்திய அரசு நியமித்துள்ளது.
  • இவர் மூன்று ஆண்டு காலம் வரை அல்லது தன்னுடைய 60-வது வயது   வரை இப்பதவியில் இருப்பார்.
ICMR
  • மருத்துவ ஆராய்ச்சிக்கான இந்தியக் குழுவானது (Indian Council for Medical Research) இந்திய ஆராய்ச்சி நிதிச் சங்கம் (Indian Research Fund Association -IRFA) என்ற பெயரில் 1911-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
  • இது உலகின் மிகவும் பழமையான மற்றும் மிகப்பெரிய மருத்துவ ஆராய்ச்சி அமைப்பாகும்.
  • உயர் மருத்துவ ஆராய்ச்சியின் மேம்பாடு, ஒருங்கிணைப்பு மற்றும் மருந்துப் பொருட்களின் உள்ளடக்கக் கூறுகளின் கலப்பு உருவாக்கம் (Formulation) ஆகியவற்றுக்கான இந்தியாவின் உச்சபட்ச அறிவியல் அமைப்பே மருத்துவ ஆராய்ச்சிக்கான இந்தியக்குழு ஆகும்.
  • புதுதில்லியில் தலைமையகத்தைக் கொண்டுள்ள இந்தக் குழுவானது மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் சுகாதார ஆராய்ச்சித்துறையின் கீழ் செயல்படுகின்றது.
  • மத்திய சுகாதார அமைச்சர் மருத்துவ ஆராய்ச்சிக்கான இந்தியக் குழுவினுடைய நிர்வாக அமைப்பின் (Governing body) தலைவராவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்