TNPSC Thervupettagam

பொது உரிமையியல் சட்டத்தை அமல்படுத்துவதற்கான குழு

November 9 , 2022 620 days 374 0
  • குஜராத் மாநில அமைச்சரவையானது, அம்மாநிலத்தில் பொது உரிமையியல் சட்டத்தை அமல்படுத்துவதற்காக ஒரு குழுவை அமைக்க முடிவு செய்துள்ளது.
  • உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவர் தலைமையில் இந்தக் குழு அமைக்கப்பட உள்ளது.
  • அரசியலமைப்பின் IV ஆம் பகுதியில் உள்ள 44வது சரத்து பொது உரிமையியல் சட்டம் பற்றிக் கூறுகிறது.
  • இந்தியாவில் மதம், பாலினம் மற்றும் சாதி வேறுபாடின்றி ஒரே மாதிரியான உரிமையியல் சட்டத்தைக் கொண்ட ஒரே மாநிலம் கோவா ஆகும்.
  • இது 1961 ஆம் ஆண்டில் இந்திய ஒன்றியத்தில் கோவா இணைந்த பிறகும் அந்த மாநிலத்தில் இன்றும் அமல்படுத்தப்பட்டு வரும் 1867 ஆம் ஆண்டின் போர்த்துகீசிய பொது உரிமையியல் சட்டத்திலிருந்துப் பெறப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்