TNPSC Thervupettagam

பொது ஒப்புதலை திரும்பப் பெறுதல்

June 17 , 2023 528 days 315 0
  • மத்தியப் புலனாய்வுத் துறைக்கு அளித்தப் பொது ஒப்புதலைத் தமிழக அரசு திரும்பப் பெற்றுள்ளது.
  • மத்தியப் புலனாய்வுத் துறையானது இனி ஒரு விசாரணையை மேற்கொள்வதற்கு என்று தமிழக அரசிடம் முன் அனுமதி பெற வேண்டும்.
  • 1946 ஆம் ஆண்டு டெல்லி சிறப்புக் காவல் பிரிவு ஸ்தாபனச் சட்டத்தின் 6வது பிரிவின் படி, மத்தியப் புலனாய்வுத் துறையானது தங்கள் அதிகார வரம்பில் விசாரணையை மேற்கொள்வதற்கு அந்தந்த மாநில அரசுகளிடமிருந்து ஒப்புதல் பெற வேண்டும்.
  • மத்தியப் புலனாய்வுத் துறைக்கு மாநில அரசுகள் வழங்கும் ஒரு பொது ஒப்புதலானது, அத்தகைய இடையூறுகள் இல்லாமல் விசாரணைகளை மேற்கொள்ள இந்த மத்திய முகமைக்கு உதவுகிறது.
  • தற்போது மிசோரம், மேற்கு வங்காளம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, கேரளா, ஜார்க்கண்ட், பஞ்சாப் மற்றும் மேகாலயா ஆகிய ஒன்பது மாநிலங்கள் ஏற்கனவே மத்திய புலனாய்வுத் துறைக்கு அளித்தப் பொது ஒப்புதலைத் திரும்பப் பெற்றுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்