பொது சுகாதாரச் சேவை வழங்கீட்டு (UHC) திட்டத்தின் முக்கியக் கருத்தாக்கம் என்ன என்றால், ஒவ்வொருவரும் அவர்களின் இருப்பிடம் அல்லது பொருளாதார நிலையைப் பொருட்படுத்தாமல், எந்தவித நிதிச் சுமைகளையும் எதிர்கொள்ளாமல் தரமான சுகாதாரப் பாதுகாப்பு சேவையை அணுக வேண்டும் என்பதாகும்.
2012 ஆம் ஆண்டு டிசம்பர் 12 ஆம் தேதியன்று, ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது பொது சுகாதார நலனை (UHC) அடைவதற்கான முயற்சிகளைத் துரிதப்படுத்துமாறு உலக நாடுகளை வலியுறுத்தும் வகையிலான தீர்மானத்தை நிறைவேற்றியது.
2017 ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் சபை இந்த நாளை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
2023 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, அனைவருக்குமான ஆரோக்கியம்: நடவடிக்கை எடுப்பதற்கான நேரம் என்பதாகும்.