TNPSC Thervupettagam

பொது-தனியார் கூட்டாண்மை மாதிரி அடிப்படையிலான இந்தியாவின் முதல் அடல் மேம்பாட்டு ஆய்வகங்கள்

July 18 , 2023 368 days 200 0
  • OPPO இந்தியா நிறுவனமானது, நிதி ஆயோக் அமைப்பின் அடல் புத்தாக்கத் திட்டத்துடன் (AIM) இணைந்து அடல் மேம்பாட்டு ஆய்வகத்தினை (ATL) கேரளாவில் நிறுவ உள்ளதாக அறிவித்துள்ளது.
  • இந்த ஒத்துழைப்பு நடவடிக்கையானது, பொது-தனியார் கூட்டாண்மை மாதிரியின் அடிப்படையிலான இந்தியாவின் முதல் அடல் மேம்பாட்டு ஆய்வகமானது நிறுவப்பட உள்ளதைக் குறிக்கிறது.
  • இந்த முன்னெடுப்பானது, ஆற்றல்மிக்க எதிர்காலத் தொழில்நுட்பத்திற்குத் தயாரான தொழிலாளர் வளங்களை உருவாக்குவதையும், இளையோர்களிடையேத் தொழில் முனைவு மற்றும் பல்வேறு தொழில்நுட்பத் திறன்களை வளர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 2022 ஆம் ஆண்டு வரையில், இந்தியாவில் 35 மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில் அரசாங்க மானியங்கள் மூலம் 10,000 அடல் மேம்பாட்டு ஆய்வகங்கள் நிறுவப் பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்