2022-23 ஆம் ஆண்டில் பொது விநியோகத் திட்டத்தின் (PDS) அரிசி விநியோகத்தில் ஏற்பட்ட இழப்புகளால் (சரக்குப் போக்குவரத்தின் போது வீணாகும் அரிசிகள் மற்றும் கள்ளச் சந்தையில் விற்கப்படும் அரிசிகள்) தமிழ்நாடு அரசிற்கு சுமார் 1,900 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு வீணான 5.2 லட்சம் டன் அளவிலான அரிசிகளானது பொது விநியோகம் (PDS) மூலம் வழங்கப்பட வேண்டிய மொத்த அரிசியின் அளவில் 15.8% பங்கினைக் கொண்டு உள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆண்டிற்கான அரிசியின் பொருளாதாரச் செலவினம் குவிண்டாலுக்கு 3,670 ரூபாய் ஆகும்.
பொது விநியோகத்தின் போது இழக்கப்பட்ட PDS அரிசியின் அளவு சுமார் 21.67 லட்சம் குடும்பங்களுக்கு உணவளிக்கப் பயன்பட்டிருக்கும்.
2024 ஆம் ஆண்டு மே 31 ஆம் தேதியன்று நிலவரப்படி, தமிழ்நாட்டில் சுமார் 2.2 கோடி அரிசிகளைப் பெறும் குடும்ப அட்டைகள் உள்ளன.