TNPSC Thervupettagam

பொது விநியோகத் திட்டத்தில் அரிசி இழப்பு

November 23 , 2024 52 days 98 0
  • 2022-23 ஆம் ஆண்டில் பொது விநியோகத் திட்டத்தின் (PDS) அரிசி விநியோகத்தில் ஏற்பட்ட இழப்புகளால் (சரக்குப் போக்குவரத்தின் போது வீணாகும் அரிசிகள் மற்றும் கள்ளச் சந்தையில் விற்கப்படும் அரிசிகள்) தமிழ்நாடு அரசிற்கு சுமார் 1,900 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
  • இவ்வாறு வீணான 5.2 லட்சம் டன் அளவிலான அரிசிகளானது பொது விநியோகம் (PDS) மூலம் வழங்கப்பட வேண்டிய மொத்த அரிசியின் அளவில் 15.8% பங்கினைக் கொண்டு உள்ளதாகக் கூறப்படுகிறது.
  • ஆண்டிற்கான அரிசியின் பொருளாதாரச் செலவினம் குவிண்டாலுக்கு 3,670 ரூபாய் ஆகும்.
  • பொது விநியோகத்தின் போது இழக்கப்பட்ட PDS அரிசியின் அளவு சுமார் 21.67 லட்சம் குடும்பங்களுக்கு உணவளிக்கப் பயன்பட்டிருக்கும்.
  • 2024 ஆம் ஆண்டு மே 31 ஆம் தேதியன்று நிலவரப்படி, தமிழ்நாட்டில் சுமார் 2.2 கோடி அரிசிகளைப் பெறும் குடும்ப அட்டைகள் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்